மேலும் ஒரு வேட்பாளர் மற்றும் நால்வர் கைது

மேலும் ஒரு வேட்பாளர் மற்றும் நால்வர் கைது

தேர்தல் முறைப்பாடுகளின் அடிப்படையில் மேலும் ஒரு வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்திற்குள் 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் ஒருவர் மற்றும் , நான்கு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதி முதல் இன்று வரை தேர்தல் முறைப்பாடுகளின் அடிப்படையில் 55 வேட்பாளர்களும் 208 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த காலக்கட்டத்தில் மொத்தமாக 47 வாகனங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர் .

இதேவேளை தேர்தல் தொடர்பாக 128 குற்றவியல் முறைபாடுகளும் , தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 476 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )