
உடனடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து – கம்போடியா சம்மதம்
கடந்த மூன்று நாட்களாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இதனை தெரிவத்துள்ளார்.
மேலும் அவர் “இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தம் மற்றும் அமைதியை நாடுகின்றனர். அவர்களுக்கு நீண்ட வரலாறு மற்றும் கலாச்சாரம் உள்ளது. வரும் ஆண்டுகளில் அவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு சிக்கலான சூழ்நிலையை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன். இந்த போரில் பலர் கொல்லப்படுகிறார்கள், இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நினைவூட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News

