
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்
திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது அருகிலுள்ள நிலப்பரப்பில் இருந்த மக்களுக்கும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

