
பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று வெளியாகும் என அறிவிப்பு
பெப்ரவரி மாதத்திற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) அறிவிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை ஒழுங்குமுறை தொடர்பான குழு இன்று கூடவுள்ளதாக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனவரி மாதத்திற்காக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ஒரு லீற்றர் லங்கா வெள்ளை டீசல் மற்றும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை 2 ரூபாவினாலும், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் ஒரு லீற்றர் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

