
ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளருக்கு பிணை
ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர் பிணையில் விடுதலை செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது
2 இலட்சம் ரூபாய் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

