தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

கடந்த ஆண்டு தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதிமால பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

2025 மே 19 ஆம் திகதி, நெதிமால, பெப்பிலியான வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் விபரங்கள்

பெயர்: சேனாரத்னகே தனஞ்சய கௌசல்ய பெரேரா (Senaratnage Dhananjaya Kaushalya Perera)

முகவரி: இல. 41/14, ஓபன் பிளேஸ் (Auburn Place), தெஹிவளை.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:

071-8596065 (பொறுப்பதிகாரி – மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு)

011-2809077 (மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு காரியாலயம்)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )