அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 17 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 17 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்ட சமூகத்தினரைப் பாதுகாக்கும் ஒரு விசேட நடவடிக்கையாகவும், “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கை நனவாக்கும் வகையிலும், “மலையக மஹிழ்சிச்சி” திட்டத்தின் கீழ் ஒரு புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (26) இடம்பெறவுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் விதிகளுடன் செயல்படுத்தப்படும் “பேரிடர் வீட்டுவசதித் திட்டத்தின்” கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் கனவரெல்ல மற்றும் ஹொப்டன் பகுதிகளில் நிலச்சரிவு அபாயத்துக்கு உள்ளான 17 குடும்பங்களுக்கு இந்த புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

நீண்ட காலமாக நிலச்சரிவு அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான மற்றும் கௌரவமான வீடுகளை வழங்கும் நோக்கில், இந்த 17 வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கத்தினால் ரூ. 54 மில்லியன் செலவிடப்பட உள்ளது.

இந்தப் புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு சவதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் தோட்ட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும், அவர்களைப் பாதிக்கும் இயற்கை அனர்த்தங்களின் அபாயங்களைக் குறைப்பதும் அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும் என்பதுடன், அந்த இலக்கை அடைவதற்கான ஒரு தீர்க்கமான படியாகவும் இத்திட்டம் கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )