ஷிரந்தி ராஜபக்ஷ – நாமல் ராஜபக்ஷ இருவருக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி CIDயில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ஷிரந்தி ராஜபக்ஷ – நாமல் ராஜபக்ஷ இருவருக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி CIDயில் ஆஜராகுமாறு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரையும் , எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரிலிய சவிய திட்டம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் வர முடியாது என்று கூறிய ஷிரந்தி ராஜபக்ஷ , வேறு திகதியை கோரியிருந்தார்.
அதன்படி 3 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அதே நாளில் காலை 9.30ற்கு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )