வாகன கொள்வனவிற்காக காத்திருக்கும் 25,000 அரச உயர் அதிகாரிகள்

வாகன கொள்வனவிற்காக காத்திருக்கும் 25,000 அரச உயர் அதிகாரிகள்

அரச சேவையின் சுமார் இருபத்தையாயிரம் சிரேஷ்ட அதிகாரிகள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களிடம் உள்ள தீர்வையற்ற (Duty-Free) வாகன அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தியோ அல்லது வாகனங்களை கொள்வனவு செய்ய முடியாமலோ கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இன்னும் தீர்மானம் எடுக்காததே இந்த நிலைமைக்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

இந்தச் சிக்கலுக்கு எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்

நாட்டில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதன் பின்னர், அரச ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 25,508 ஆகும்.

இதேவேளை, சில அரச ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, கடந்த காலங்களில் இத்தகைய தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை வாகன விற்பனையாளர்களிடம் மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )