
ஈரானை அண்மித்த அமெரிக்க போர் கப்பல்களும் தயார் நிலையிலிருக்கும் ஈரானிய போர் கப்பல்களும் பாரிய மோததலை தோற்றுவிக்குமா? அச்சத்தில் பல சர்வதேச நாடுகள்
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல்கள் , ஈரானை அண்மித்து நிறுத்தப்பட்டமையானது இரு நாடுகளுக்குமிடையிலான இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து, பாரிய மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் ஈரானில் நடைபெற்ற அரசிற்கு எதிரான போராட்டங்களின் போது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க வேண்டாம் என அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்து வந்தது .
எனினும்தமது உள்நாட்டு பிரச்சினைகளில் அந்நிய நாட்டு தலையீட்டை ஈரான் விரும்பவில்லை .தனது நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் முயற்சி இதுவென ஈரான் குற்றம் சுமத்தி வந்தது ,
இந்நிலையில் ஒருசில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ‘யுஎஸ் எஸ் ஆப்ரஹாம் லிங்கன்’ (USS Abraham Lincoln – CVN 72) விமானம் தாங்கிப் போர் கப்பல் மற்றும் அதன் தலைமையிலான கப்பல் குழு ஈரானை அண்மித்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஈரானும் தனது கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏவுகணைப் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.
அமெரிக்கா எந்தவொரு தாக்குதலைத் தொடங்கினாலும், அது ஒரு பாரிய போரின் தொடக்கமாக அமையும் என்றும், தங்களின் பதில் “உடனடியாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவிலும் இருக்கும்” என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான மோதல், ஈரானில் நடக்கும் போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை,
2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நிலைமையை தோற்றுவித்துள்ளது .
துருக்கி போன்ற நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சி செய்து வருகின்றன.போர் நிலைமை ஏற்பட்டால் அது உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால் சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

