
சில இடங்களில் இன்று மழை பெய்யும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளிலும் வடமேல் , வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
CATEGORIES Sri Lanka

