
கணக்காய்வாளர் நாயகம் பதவி குறித்த ஜனாதிபதியின் பரிந்துரையை ஆராய்ந்து வருகிறோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
கணக்காய்வாளர் நாயகம் பதவி தொடர்பாக ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரிந்துரை குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (31) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியினால் ஐந்தாவது தடவையாகவும் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஒருவரின் பெயர் அரசியலமைப்புச் சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் இது குறித்து இறுதி முடிவை எடுக்கவிருந்த போதிலும், அதனை ஆராய்வதற்கு உறுப்பினர்களுக்குச் சிறிது காலம் தேவைப்படுகிறது.
அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்புச் சபை கூடி இறுதி முடிவை எடுக்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

