தனது பிள்ளையின் பொம்மைக்குள் போதைபொருள் கடத்திய   கொட்டஹேன பெண் கைது

தனது பிள்ளையின் பொம்மைக்குள் போதைபொருள் கடத்திய கொட்டஹேன பெண் கைது

சீதுவ பகுதியில் தனது பிள்ளையின் பொம்மைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டஹேன பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சீதுவ ராஜபக்ஸபுர பகுதியில் இன்று காலை போலீஸ் மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

அப்பிரதேசத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு அறையில் குழந்தையுடன் இருந்த ஒரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையுடன் வெளியே வந்தார்.

பொம்மையை பரிசோதித்தபோது, பொம்மைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் , ஹெராயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் போதைப்பொருள் பொட்டலங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கொட்டஹேனவைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட் ட்டுள்ளார்

குறித்த பெண் தனது 8 வயது பிள்ளைக்கு பொம்மை ஒன்றை கொடுத்து, பிள்ளையுடன் கொட்டஹேனவிலிருந்து சீதுவவிற்கு போதைப்பொருட்களைக் கொண்டு வந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த போதை பொருட்கள் சீதுவையில் பொட்டலம் கட்டபட்டு விற்பனைக்காக கொட்டஹேனவிற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது
என போலீசார் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )