பொரளையில் இன்று காலை விபத்தை ஏற்படுத்திய சாரதிகஞ்சா அருந்தியமை உறுதி செய்யப்பட்டது

பொரளையில் இன்று காலை விபத்தை ஏற்படுத்திய சாரதிகஞ்சா அருந்தியமை உறுதி செய்யப்பட்டது

பொரளை மயான சந்தியில் இன்று காலை விபத்தை ஏற்படுத்திய சாரதி கஞ்சா அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பொரளை மையான கனத்த சுற்று வட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்த ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் டாக்டர் ருக்‌ஷன் பெல்லனா தெரிவித்தார்.

அதுருகிரியவைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் எனவும் ஏனையவர்கள் ஐந்து ஆண்கள் எனவும் வைத்தியர் கூறினார்.

இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கனரக வாகனம் ஒன்று பொரளை கனத்த சுற்று வட்டத்தில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியது.

விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்,

மேலும் கிரேன் வாகனத்தில் பிரேக்குகள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொரளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )