முன்னாள்  கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த கடத்தல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அங்கு சந்தேக நபரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )