48 மணி நேர ரயில் வேலைநிறுத்தம்இன்று நள்ளிரவு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு

48 மணி நேர ரயில் வேலைநிறுத்தம்இன்று நள்ளிரவு மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.

தங்கள் பிரச்சினைகள் குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என ரயில் ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

தமது பிரச்சினைகள் குறித்து நேற்று ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடிய போதிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியவில்லை என சந்தன வியந்துவ கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )