
இந்திரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவி. இவர் தற்போது ‘இந்திரா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இயக்குநர் சபரிஸ் நந்தா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண் மாஸ்டர், சுனில், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படம் ஆகஸ்ட் 22ம் திகதி வெளியாகிறது.
இந்த நிலையில், ‘இந்திரா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ஊரும்’ என்ற லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை கபில் கப்பிலன், அஜ்மல் தஹ்சீன் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை ஹாஜா மொஹிதீன் எழுதியுள்ளார்.
CATEGORIES Cinema

