
ஓஹியவில் இளைஞனின் சடலம் மீட்பு
ஓஹிய – உடவேரியவத்தை பகுதியில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியின் கிராம சேவையாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டதாக ஹல்துமுல்ல போலீஸார் தெரிவித்துள்ளனர் .
உடவேரியவத்தையில் உள்ள ஓஹிய கோவிலுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, எனவும் ஹல்துமுல்ல மற்றும் பண்டாரவளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

