
டி20 உலகக் கோப்பை ; இலங்கை அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் திகதி தொடங்கி மார்ச் 8-ம் திகதிவரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த மாபெரும் தொடரில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தொடருக்கான இலங்கை அணியை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அணி விவரம்:
தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, மதீஷான் சமீரா.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமநிலையுடன் அமைந்துள்ள இந்த அணியின் மூலம் இலங்கை அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் வலுவான போட்டியை வழங்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

