
ஜனாதிபதியைப் பாதுகாக்க வந்த அதிகாரிகள் கட்டுநாயக்க duty-free கடையில் மதுபானம் வாங்கியது மோசமான செயல் – பதில் பொலிஸ் மாஅதிபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் (duty-free section) தீர்வையற்ற கடைகளில் 7 ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் சட்டவிரோதமாக 35 மதுபானம் போத்தல்களை வாங்கியதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் மீது ஜனாதிபதி அலுவலகம் கடுமையான ஒழுகாற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், ஏழு பாதுகாப்புப் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமீபத்தில் மாலைத்தீவுக்குப் புறப்பட்டபோது குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய வளாகத்திற்குள் வந்த குறித்த பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்டுநாயக விமானநிலையத்தின் வரியில்லாப் பிரிவின் விதிமுறைகளின் அடிப்படையில் குறித்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மதுபானம் வாங்க அனுமதியில்லாத போதும் விதிமுறைகளை மீறி மதுபானம் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியைப் பாதுகாக்க வந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளை கைவிட்டு, இவ்வாறு வரியில்லா கடைகளுக்குச் சென்று மது வாங்குவது மிகவும் மோசமான செயல் என்றும், அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
ஜனாதிபதியைப் பாதுகாக்க வந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளை கைவிட்டு, இவ்வாறு வரியில்லா கடைகளுக்குச் சென்று மதுபானம் வாங்குவது மிகவும் மோசமான செயல் என்றும், அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் இது மிகவும் மோசமான முன்னுதாரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
சுங்க விதிமுறைகளின்படி, நாட்டிற்கு வருகை தரும் அல்லது நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகள் மட்டுமே குறிப்பிட்ட அளவு வரம்புகளுக்குட்பட்ட வகையில் வரியில்லா பிரிவில் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

