
1000 இளம் தொழில் முயற்சியாளர்களை முன்னேற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் ஒன்றிணைந்து செயற்படுத்தும், 1000 இளம் தொழில் முயற்சியாளர்களை முன்னேற்றுவதற்கான தேசிய திட்டத்தின் (4 I Project) ஆரம்ப நிகழ்வு நேற்று (22) பத்தரமுல்லயில் இடம்பெற்றது.
இந்த 4I திட்டம் நிலைபேறாண அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக செயற்படுத்தப்படும் முக்கியமான தேசிய திட்டமாகும்.

இதன்படி ஒருங்கிணைங்த்தல், புத்தாக்கம், செயற்படுத்துதல், மற்றும் முன்னேற்றுதல் போன்ற அடிப்படை நான்கு திசைகளையும் அடிப்படையாகக் கொண்டது.
எதிர்பார்க்கப்படும் பிரதான பொருளாதார இலக்குகள்:
• இலங்கையில் தேசிய உற்பத்தித்திறன் 52% ஆக அதிகரித்தல்.
• முயற்சியாண்மைப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி சேவை ஊடாக வியாபாரத்தை சந்தைப் போக்கிற்கு வழிப்படுத்துதல்.
• ஒவ்வொரு தொழிலிலும் தொழில்நுட்ப அணுகுமுறைகள் மூலம் ஒரு வணிகத்தை புதுமை நோக்கி வழிநடத்துதல்
முதலாவது திட்டத்தின் வெற்றி அடிப்படையில் அதில் 100 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அதிக அளவில் முன்னேற்றுதல்.

இதன் இரண்டாம் கட்டம் நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 17 மாவட்டங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

