
இலங்கை சுங்க வருமானம் 02 டிரில்லியனை தாண்டியுள்ளது
இந்த ஆண்டு இலங்கை சுங்கத்தால் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் நேற்று (30) மாலை நிலவரப்படி 02 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது என்று சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான 2.115 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலங்கை சுங்கத் திணைக்களம் வெற்றிகரமாக அடைந்து வருகிறது.
வரலாற்றில் ஒரு அரசாங்க வரி வருமான அறவவீட்டுத் திணைக்களத்தால் ஒரே ஆண்டில் சேகரிக்கப்பட்ட ஆகக்கூடிய வருமானமாக சுங்கத் திணைக்களம் இந்த சாதனையை அடைந்துள்ளது.
மோட்டார் வாகனங்களிலிருந்து பெறப்பட்ட 630 பில்லியன் ரூபாய் இந்த வருமானத்தில் அடங்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் வருமான இலக்கை விட சுமார் 300 பில்லியன் ரூபாய் அதிகமாக ஈட்ட முடியும் என்று இலங்கை சுங்கத் திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

