
பயங்கரவாத அச்சறுத்தல்களையடுத்து அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைள்
பயங்கரவாதிகள் அல்லது “சமூக விரோத சக்திகளிடமிருந்து கிடைத்த அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம்,அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் உச்சபட்சபாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரையான காலப்பகுதியில் பயங்கரவாதிகள் அல்லது “சமூக விரோத சக்திகள் விடுத்த அச்சுறுத்தல்களின் அடிப்படையில் உச்சபட்ச பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விமான சேவை நிலையங்களிலும் உடனடியாக மேம்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் பாதுகாப்புப் பிரிவு நேற்று தெரிவித்ததாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.
இந்திய மத்திய பாதுகாப்பு அமைப்பின் சமீபத்திய தகவல்களின்படி சமூக விரோத சக்திகள் அல்லது பயங்கரவாத குழுக்களால் இடம்பெறும் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
முனையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், சுற்றுப்பகுதிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் ரோந்துப் பணியை அதிகரிக்கும் அதே வேளையில், 24 மணி நேரமும் அதிகபட்ச பாதுகாப்பை பராமரிக்க பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் அந்நாட்டின் போலீஸ் படைகளுடன் ஒருங்கிணைந்து நகர பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் , வணிக விமானங்களில் புறப்படுவதற்கு முன்பு அனைத்து சரக்கு மற்றும் அஞ்சல்கள் குறித்து கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உறுதி செய்ய வேண்டி நிறுவனங்களுக்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் அனைத்து ஊழியர்கள், பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் அடையாளத்தை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மேலும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அணுகலும் உடனடியாக அறிவிக்கப்பட்டு மறுக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நடத்தை அல்லது கைவிடப்பட்ட பொருட்கள் தொடர்பில் பதிவுசெய்ய அனைத்து சிசிடிவி அமைப்புகளுக்கும் தொடர்ச்சியான செயல்பாட்டு கண்காணிப்பில் உள்ளனவா என்பதை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் காவல்துறை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, புலனாய்வுப் பணியகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தமக்குள் நெருங்கிய தொடர்பை பேணுமாறு பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இது உடனடி உளவுத்துறை தகவல் பகிர்வை உறுதி செய்ய உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நபர்கள் மற்றும் கைவிடப்பட்ட பொதிகள் தொடர்பில் பயணிகளும் முறைப்பாடளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,
பொருத்தமானதாகக் கருதப்படும் இடங்களில் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் அவசரகால பதில் குழுக்கள் மற்றும் நெறிமுறைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் சாத்தியமான இடங்களில் விரைவான பயிற்சிகள் அல்லது விளக்கங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறபட்டுள்ளது..
விமான நிலைய பொறுப்புள்ள அதிகாரிகள் , சிறப்பு விமான பயணிகள் சேவை குழு கூட்டங்களை கூட்ட வேண்டும் எனவும் சிவில் விமான போக்குவரத்து நடவடிக்கைகளில் சட்டவிரோத தலையீட்டைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
பிராந்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட விமான நிலையங்களில் உடனடி சிறப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்திய ஊடக செயதிகள் கூறுகின்றன.

