
கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு , ஒருவர் பலி
கொட்டாவ, மலபல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இப்பகுதியிலுள்ள ஒரு விகாரைக்கு அருகில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது .
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபருக்கு நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்த்துள்ளதாகவும் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
CATEGORIES Sri Lanka

