நாளை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை

நாளை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை

நாளை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, முன்னதாக நடைமுறையில் இருந்த எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையைக் கருத்தில் கொள்ளாதிருக்க இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், அந்த காலப்பகுதியில் வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை-இரட்டை முறைமை பின்பற்றப்பட்டதுடன், டீசல் வாகனங்களுக்கான QR முறைமை எவ்வித மாற்றமுமின்றி நடைமுறையில் இருந்தது.

இதன்படி, நாளை நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமை மீண்டும் முழுமையாகச் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )