
சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு கன மழை
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
CATEGORIES Sri Lanka
TAGS srilanaka

