
ஒரு பெண்ணுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்தி வதந்தி பரப்பப்படுவது தொடர்பாக CIDயில் முறைப்பாடு
சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரவி வரும் காணொலிகள் மற்றும் பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம், சட்டத்தரணி அகலங்க உக்வத்தே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இந்த முறைப்பாடளித்துள்ளார் .
குறித்த சமூக வலைத்தள பதிவு , ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய தான் முறைப்பாடளித்ததாகவும் , ஒரு பெண் மற்றும் ஜனாதிபதி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் படங்கள் பிற பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியதாக, சட்டத்தரணி அகலங்க உக்வத்தே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .
மேலும், முற்றிலும் ஆதாரமற்ற இந்த பதிவுகள் சமூகத்தை தவறாக வழிநடத்தும் செயலாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

