
பண்டாரகமவில் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டவர் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி என பொலிஸார்தெரிவிப்பு
பண்டாரகம போலீஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொட பாலத்திற்கு அருகில் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டவர் லலித் குமார என்ற முன்னாள் சிறைச்சாலை அதிகாரி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 57 வயதான லலித் குமார, கோத்தாகொட பாதாள உலகத் தலைவர் சமயன் என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பான தகவலை வழங்கியவர் எனவும் இந்த வழக்கில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தவர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பண்டாரகம போலீஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொட பாலத்திற்கு அருகில் குறித்த நபர் , நேற்றைய தினம் மாலை காரில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ,அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுகளுக்கு அவர் இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய பண்டாரகம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

