கொட்டகலையில் குடியிருப்பு பகுதியொன்றில் தீ பரவல்

கொட்டகலையில் குடியிருப்பு பகுதியொன்றில் தீ பரவல்

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று (09) காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

அருகில் இருந்த மற்றொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், ஒரு வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

இந்த தீ விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் நிர்க்கதியாகியுள்ளதுடன், உயிர்சேதங்களோ காயங்களோ எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )