முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (9) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷ் தொடர்பான விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, டக்ளஸ் தேவானந்தா கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )