மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்சபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன்போது தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறைக்கும் தீ பரவியுள்ளது.

தீயினால் என்னெ்ன சேதம் ஏற்பட்டுள்ளது என்று இன்னும் மதிப்பிடவில்லை. ஆனால், யாருக்கும் தீக் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )