
பாராளுமன்றம் செப்டெம்பர் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்
2025 செப்டெம்பர் மாதம் முதலாவது பாராளுமன்ற வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் நேற்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய பாராளுமன்றம் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை கூடவுள்ளது.
அத்துடன், செப்டெம்பர் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் முதலீடுகளை உறுதிப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 157வது பிரிவுக்கு அமைய குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதுடன், அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
அத்துடன், அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 10ஆம் திகதி புதன்கிழமை, மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப.10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப. 10.30 மணிமுதல் மு.ப.11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப.11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) இண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவை தொடர்பான இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, பி.தயாரத்ன, இந்திரதாச ஹெட்டிஆரச்சி, எம்.எச். சேஹு இஸ்ஸதீன், விஜேசுந்தர பண்டார ரணதுங்க ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

