
துசித ஹல்லொலுவ விளக்கமறியல் நீடிப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம் 4 ஆம் திதகி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
தேசிய லொத்தரி சபைக்கு சொந்தமான அரசாங்க சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் துசித ஹல்லொலுவ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

