
செம்மணியில் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இரு எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் பெரிய எலும்பு கூட்டொன்றின் நெஞ்சு பகுதியுடன், கட்டியணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இந்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

