
தெஹிவளை கடற்கரை வீதியில்கழுத்தை நெரித்து கொலை செய்த சந்தேக நபர் கைது
தெஹிவளை போலீஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் நபர் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை கடந்த மே மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் தெஹிவளை போலீசார் விசாரணைகளை தொடங்கினர் .
இதன்போது தெஹிவளை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் நேற்று இரவு தெஹிவளை போலீஸ் பிரிவின் சைத்யா வீதிப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
38 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒரேவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

