
இந்தேனேஷியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் பக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு, இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட பின்னர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை நேற்று மாலை நாடு கடத்தப்பட்டனர்.
குற்றக் குழுவினருடன் ஜகார்த்தாவில் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் மற்றும் குழந்தை மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேஷிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

