
கட்டுநாயக்காவில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹாஷிஷ் உள்ளிட்ட 11 கிலோக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடமிருந்து 6 கிலோ 590 கிராம் குஷ் போதைப்பொருளும், 4 கிலோ 910 கிராம் ஹாஷிஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
CATEGORIES Sri Lanka

