
கெஹல்பத்தர பத்மே உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை அழைத்துவர விசேட குழு இன்று இந்தோனேசியா பயணம்
கெஹல்பத்தர பத்மே உட்பட கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர விசேட போலீஸ் குழு இன்று இந்தோனேசியாவிற்கு புறப்படுகிறது.
தற்போது இந்தோனேசியாவிலுள்ள இலங்கை போலீஸ் புலனாய்வாளர்களுடன் இணைந்து, இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன், கெஹல்பத்தர பத்மே உட்பட கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை பலத்த பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வர விசேட போலீஸ் குழு திட்டமிட்டுள்ளது.
இதனைப்படையில் கெஹல்பத்தர பத்மே உட்பட குழுவினர் நாளை மதியம் நாட்டிற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பகோ சமன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் மனைவி மற்றும் குழந்தை நேற்று மதியம் நாட்டிற்கு அனுப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், கெஹல்பத்தர பத்மே சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தில் நாட்டில் வாங்கிய பல அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான உண்மைகள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கமாண்டோ சாலிந்தவின் பல சொத்துக்கள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் ,பாணதுரே நிலங்க உட்பட 06 பேர் நேற்று முன்தினம் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கை போலீசார் , இந்தோனேசிய போலீசார் மற்றும் இன்டர்போல் ஆகியவற்றின் கூட்டு சர்வதேச நடவடிக்கையின் போது வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினர் கைதுசெய்யப்பட்டனர்.

