
ஜம்மு காஷ்மீரில் கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி 5 பேரை காணவில்லை
ஜம்மு காஷ்மீரில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேரை காணவில்லை எனவும் இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன .
ஜம்மு காஷ்மீரில் ராம்பன் மற்றும் ரியாசி மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரி ஏற்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதமடைந்ததால் ஜம்மு-ஸ்ரீநகர் சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
ஜம்மு-கத்ரா இடையே ரெயில் சேவை 5-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பூஞ்ச், கிஷ்த்வார், ஜம்மு, உதம்பூர், ராம்பன் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன .

