கெஹெல்பத்தர பத்மே உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினர் சற்று முன்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பபட்டனர்

கெஹெல்பத்தர பத்மே உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினர் சற்று முன்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பபட்டனர்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் வந்த விமானம் சில நிமிடங்களுக்கு முன்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் 3.30 அளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாலை 7.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் , பொலிஸ் சிறப்புப் பணிக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அங்கு கண்காணிப்பு மேற்பார்வையில் ஈடுபட்டிருந்தனர்.

மேற்கு வடக்கு குற்றப்பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த ஜெயசுந்தர ஆகிய இரு அதிகாரிகளுடன் இந்தோனேசிய சிறப்பு பொலிஸ் குழுவின் பங்கேற்புடன் இணைந்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன் , பாணந்துர நிலங்க , கமாண்டோ சலித்த, தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமனின் மனைவி அவர்களது குழந்தை ஆகியோர் நேற்று முன்தினம் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தையை மலேஷிய போலீசார் விடுவித்து நேற்று மதியம் நாட்டிற்கு அனுப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கமாண்டோ சலிந்தவின் பல சொத்துக்கள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )