
ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது -சிறைச்சாலைகள் ஆணையாளர்
தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் , ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், Zoom தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

