போரை நாடவில்லை… தற்காப்பு மட்டுமே ! – ஈரான் ஜனாதிபதி

போரை நாடவில்லை… தற்காப்பு மட்டுமே ! – ஈரான் ஜனாதிபதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக, ஈரான் போரைத் தேடவில்லை என்றும், தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஈரான் எந்த நாட்டையும் தாக்க முயற்சிக்கவில்லை என்றும், தற்போதைய சூழ்நிலையில் எந்த தரப்பினரையும் தாக்கும் நோக்கம் இல்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சிவில் அடிப்படை கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய ஈரான் ஜனாதிபதி,
அத்தகைய செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்றும், மனித உரிமைகள் தொடர்பான இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் எந்த நாட்டையும் தாக்கவில்லை. தற்போதைய சூழலில் யாரையும் தாக்கும் நோக்கம் எங்களிடம் இல்லை. நாங்கள் எங்கள் நாட்டை சட்டபூர்வமாக தற்காத்துக்கொள்கிறோம்,” என்று அவர் கூறியதாக ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஈரான் போரை நாடுகிறது என்று கூறப்படக் கூடாது. மாறாக, நாங்கள் சமாதானத்தை விரும்பும் நாடாக இருக்கிறோம். எங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமான தற்காப்பே.
எப்படி ஒரு மனிதன் தாக்குதலுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொள்கிறானோ, அதேபோல் ஒரு நாடும் தாக்குதலுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொள்கிறது,” என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )