பாணந்துறையில் இன்று தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி
பாணந்துறை, வாலனை கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், ஆனால் துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

