எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய , ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 283 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 313 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 299 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.


