சமன் ஏக்கநாயக்கவுக்கு சிஐடி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக , ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்குச் சென்றதற்காக அரசாங்க நிதியை செலவழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரின் பயணத்துக்கான நிதியை ஜனாதிபதி செயலகமே ஒதுக்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சமன் ஏக்கநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )