இன்றைய தினம் வானில் இரத்த நிலவு என்ற முழு சந்திரகிரகணம் தென்படும்
இன்று இரத்த நிலவு (Blood Moon) என அழைக்கப்படும் இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும் தோன்றுகிறது.
முழு கிரகணம் 82 நிமிடங்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
இந்த சந்திரகிரகணம் 7 ஆண்டுகளின் பின் தோன்றுகிறது.
இதன்போது முழு நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக மக்கள் தொகையில் சுமார் 77% வர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இன்றைய தினம் இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது .
இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு,
????கிரகணம் ஆரம்பம் – இரவு 8:58 (செப்டம்பர் 7)
????பகுதி கிரகணம் ஆரம்பம் – இரவு 9:57
????முழுமையான கிரகணம் – இரவு 11:01
????அதிகபட்ச கிரகணம் – நள்ளிரவு 11:42
????கங்கண கிரகணம் முடிவு – அதிகாலை 12:22 (செப்டம்பர்
????பகுதி கிரகணம் முடிவு – அதிகாலை 1:26
????கிரகணம் முடிவு – அதிகாலை 2:25

