
யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் கடத்திச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் நேற்று (27) இரவு கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடத்திய சோதனையின் போது 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டது.
கைதாகிய நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும், ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தம்மை விடுவிக்க பொலிஸாருக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாக சந்தேகநபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கைதான நபரை மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதீபன்

