
இந்தியாவின் 17-வது துணை ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்
இந்தியாவின் 17-வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (09) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்திகதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி உறுதியானது.
இந் நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் இன்று (09) மாலை வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் திகதி திடீரென பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES India

