
பம்பலப்பிட்டி கடற்கரையில் குழந்தையொன்றின் சடலம் மீட்பு
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (10) காலை ஒரு வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 3.30 மணியளவில் கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாகக்கூறப்படும் சிறுவனின் சடலமாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

