பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி

பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி

பலாங்கொடை – இரத்தினபுரி வீதியில் எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஆவார். 

பலாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை கடந்து செல்ல முயன்ற போது பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )